பெண் நட்பு
மெல்லக் கதவு
திறந்து
நான் மிதந்து
நடந்தேன்.
என் மேனியை
வருடிச் சென்றது
நந்தவனக் காற்று!
உரசிச் செல்லும்
காற்றெதற்கு
நான் இல்லையா
உனக்கு
என்றே காலைக்
கதிரவனின்
கனிவான ஒளிவீச்சு!
தேனூற்றைத் தேடும்
தேனீக்கள் ரீங்காரம்!
வாவென்ற
அழைப்பேற்று வட்டமிடும்
வண்ணத்துப் பூச்சிகள்!
நேற்றிலும் நான்
இன்ற ழகென
இதழ்விரிந்த மொட்டுக்கள்!
இன்முகம் காட்டி
என்னுள்
இன்பமும் ஊட்டி
எல்லையிலா மகிழ்வை
என்றும்
எனக்கே தரும்
என்மலர்த் தோட்டம்!
இதற்கு ஈடேயெம்
No comments:
Post a Comment